| 000 | : | nam a22 7a 4500 |
| 008 | : | 200228b ii 000 0 tam d |
| 245 | : | _ _ |a நீர்மூழ்கி குட்டைப்பகுதி (நீர்முள்ளிக்குட்டை) |
| 520 | : | _ _ |a கி.பி.9-ஆம் நூற்றாண்டில் பல்லவர்கள் வலுவிழந்த போது, ஆங்காங்கே குறுநில மன்னர்கள் வலிமை பெற்று சிறு சிறு பகுதிகளை ஆண்டு வந்தனர். பெரிய பேரரசுகள் எதுவும் உருவாகாத காலகட்டத்தில் இந்த நடுகல் கல்வெட்டு வெட்டப்பட்டுள்ளது. எனவே இதில் ஆட்சியாண்டு பற்றிய குறிப்புகள் எதுவும் இல்லை. இந்த காலகட்டத்தில ஆத்தூர் மற்றும் அதை சுற்றியுள்ள பகுதிகளை ராமாடிகள் என்பவர் ஆட்சி புரிந்துள்ளார். அப்போது அவரின் மகன் பெருமான் என்பவர் பூலாம்பாடி என்ற ஊரின் மீது படையெடுத்து சென்றுள்ளார். இந்த பூலாம்பாடி என்பது தற்போது பெரம்பலூர் மாவட்டம், அரும்பாவூரின் அருகே உள்ள ஊராக இருக்கலாம். இந்த படையெடுப்பில் கலந்து கொண்ட பிள்ளைப்பாடி என்னும் ஊரை சேர்ந்த பாராவன்னார் என்பவருடைய மகன் பொன்னகுன்றி என்பவர் வீரமரணம் அடைந்தார் என்ற செய்தி இந்த வட்டெழுத்துக் கல்வெட்டில் குறிப்பிடப்படுகின்றது. அந்த வீரனுக்காக எடுக்கப்பட்ட நடுகல் இதுவாகும். ராமாடிகள் என்ற குறுநில மன்னரின் வம்சம் ஆத்தூர் பகுதியை ஆட்சி செய்தது தமிழக வரலாற்றுக்கு ஒரு புதிய செய்தியாகும். |
| 653 | : | _ _ |a நடுகல், வீரக்கல், நினைவுக்கல், ஆத்தூர், சேலம், ராமாடிகள், குறுநில மன்னர், வட்டெழுத்து, கல்வெட்டு, தமிழி, நீர்மூழ்கிக் குட்டை, நீர்முள்ளிக்குட்டை, வாழப்பாடி |
| 752 | : | _ _ |a நீர்மூழ்கி குட்டைப்பகுதி (நீர்முள்ளிக்குட்டை) |c நீர்மூழ்கி குட்டைப்பகுதி (நீர்முள்ளிக்குட்டை) |d சேலம் |f வாழப்பாடி |
| 914 | : | _ _ |a 11.712059117582 |
| 915 | : | _ _ |a 78.352829124765 |
| 931 | : | _ _ |a தமிழ் இணையக் கல்விக்கழகம் |
| 995 | : | _ _ |a TVA_INS_001345 |
| barcode | : | TVA_INS_001345 |
| book category | : | தமிழ் |
| cover | : |
|
| Primary File | : |